கிளிநொச்சியில் கொள்ளையர்கள் அட்டகாசம் -மக்கள் பீதியில்!

கிளிநொச்சி பகுதிகளில் உள்ள கோயில்கள், வர்த்தக நிலையங்கள் வீடுகள் என பல இடங்களில் கத்திமுனையில் கொள்ளையர்கள் அட்டகாசம் புரிவதாக அப்பிரதேச மக்கள் பீதியில் உறைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா்.

இன்றையதினம்(27.03.2018) அதிகாலை 2.00 மணியளவில் பன்னங்கண்டி பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து கொள்ளையா்கள் கொள்ளையடித்துள்ளார்கள்.

அப்பகுதிக்கு சென்ற கொள்ளையர்கள் வீட்டின் உரிமையாளரை அழைத்து அவரை கத்திமுனையில் வைத்து கொள்ளையில் ஈடுபட்டபோது அயல் வீடுகளிருந்து சத்தங்கள் எழும்பியதையடுத்து கொள்ளையர்கள் தப்பிசெல்ல முயன்றனா்.

இந்நிலையில் அயலவர்கள் அவா்களை விரட்டிசென்று உந்துருளியை பிடித்தபோது அவர்கள் கொண்டு வந்த ஆயுதங்களான வாள்கள், கூரிய கத்திகள் மற்றும் உந்துருளியையும் விட்டு தப்பிசென்றுள்ளார்கள்.

இது தொடர்பாக பண்னங்கண்டி மக்கள் பொலிஸாருக்கு அறிவித்த போது பல மணிநேரம் கழித்தே அப் பகுதிக்கு பொலிஸார் வருகை தந்தமையால் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயப்பொருட்களை கொண்டு சென்றுள்ளார்கள். இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனா்.

தாயகச்செய்திகள்