பிரித்தானிய அ.பா.உ.கு தலைவருடன் இலங்கை தொடர்பில் கலந்துரையாடல்

பிரித்தானிய அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவருடன் இலங்கை இனப்படுகொலை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடந்த (24) ஆம் திகதி தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமனற உறுப்பினர் குழுவின் தலைவரான பாராளுமன் உறுப்பினர் பவுள் சகுல்லி (Paul Sacully) அவர்களை சந்தித்த புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் இனப்படுகொலை தொடர்பாக இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடினர்.
நாடு கடந்த தமிழீழ அரசின் முன்னணி செயற்பாட்டாளர் இளவரசன் ஜெயபாலன் தலைமையில் திலக் ஆண்ரியுஸ், கஜானன் ஞானசேகரம், கோபாலகிஷ்ணன் குகச்செல்வம், கோவிந்தப்பிள்ளை லிங்கேஸ்பரன், கிஸ்ணமூர்த்தி உமாராஜ், பாலசிங்கம் குமரேசன், சிவஞானலிங்கம் சுபாஷ்கர், கணேசபிள்ளை ஜதுர்த்தன் வரதராஜா மோகனரூபன், கௌசிகன் ஸ்ரீகுமார், பிரான்சிஸ் வசந்தராஜன், அஷந்தன் தியாகராஜா, இளையதம்பி கலைவாணன், புஸ்பாதரன் புத்திரசிகாமணி, வசந்தகுமாரி சந்திரபாலன் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகச்செய்திகள்