பிரான்ஸ் கடலில் மீட்கப்பட்ட காணாமால் போன இலங்கை மீனவர்கள்!!

கடந்த பெப்ரவரி மாதம் நீர்கொழும்பு கடலுக்குச் சென்ற மீனவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், பிரான்சிற்கு சொந்தமான ரீயூனியன் தீவிற்கு அருகில் அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான நிலையில் கடலில் மிதந்த 6 பேரையும் அந்த நாட்டு கப்பல் ஊடாக காப்பற்றப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் அவர்கள் பயணித்த படகு தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு காப்பாற்றப்பட்ட மீனவர்கள் ஆரோக்கியமான நிலையில் உள்ளார்கள் என மீன்பிடி திணைக்களத்தின் உதவி இயக்குனர் பத்மபிரிய திசேரா குறிப்பிட்டுள்ளார்.
குறித்த 6 பேரும் இதுவரையில் ரீயூனியன் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த மீனவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் நீர்கொழும்பு கடலுக்கு சென்றிருந்த போதே காணாமல் போயிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகச்செய்திகள்