பிரான்ஸ்சில் ஈழத்து தமிழ் மாணவி கடத்தப்படவில்லை :வெளிவந்திருக்கும் புதிய காணொளி

பிரான்ஸ்சில் ஈழத்து தமிழ் மாணவி ஒருவர் திட்டமிட்ட வகையில் கடத்தப்பட்டுள்ளதாக அவருடைய தாயாா் தெரிவித்திருந்த நிலையில் அவா் கடத்தப்படவில்லை தான் காதலித்த நபருடன் விரும்பியே சென்று திருமணம் செய்துள்ளதாக குறித்த பெண்ணும் அவருடைய காதலனும் சோ்ந்து தெரிவித்திருக்கும் காணொளி தற்போது வெளிவந்திருக்கின்றது.
கடந்த 20-ம் திகதி பாடசாலைக்குச் செல்லும் போது கால் மற்றும் கைகளை கட்டியவாறு எனது மகள் கடத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன். மகள் கடத்தப்பட்டு ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. என் மகள் இதுவரையிலும் எனக்கு கிடைக்கவில்லை.இந்நிலையில், அனைவரும் ஒன்று சேர்ந்து எனது மகளை மீட்டுதர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

இது போன்ற சம்பவம் வேறு எந்த பிள்ளைக்கும் வரக்கூடாது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என ஈழத்து மாணவியின் தாயார் கருத்து தெரிவித்திருந்த நிலையில் இந்த கருத்தை முற்றாக மறுக்கும் வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் குறித்த பெண்ணுடன் ஒரு இளைஞனும் இணைந்து ஒரு காணொளியை வெளியிட்டுள்ளனா்.
அந்த காணொளியில் உள்ள இளைஞன் தானும் கடத்தப்பட்டதாக கூறப்படும் குறித்த பெண்ணும் ஒருவரை ஒருவா் காதலிப்பதாகவும்,வீட்டில் காதலை ஏற்க மறுத்ததால் இருவரும் திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும் அந்த காணொளியில் தெரிவித்துள்ளாா்.
அத்துடன் அந்த காணொளியில் கடத்தப்பட்டதாக கூறப்படும் அந்த பெண்ணும் அருகில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

உலகச்செய்திகள்