இலங்கையில் வானில் ஏற்படவுள்ள மாற்றம்!!

இலங்கையில் இம்மாதம் 25ம் திகதியின் பின்னர் வரட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்ப்பதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. விசேடமாக நாட்டின் கிழக்கு பகுதியில் நிலவும் வறட்சிக் காலநிலையிலேயே இந்த மாற்றம் ஏற்படும் என அது தெரிவித்துள்ளது.
ஆனாலும், நாட்டின் ஏராளமான பகுதிகளில் தொடர்ந்தும் வறட்சியான காலநிலை நீடிக்கும் என வானிலை அவதான நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்ட காலநிலை நிலவும் எனவும் இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை பெய்யக்கூடும் எனவும் மேற்படி வானிலை அவதான நிலையத்தின் செய்திக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

Allgemein