துயர் பகிர்தல் திரு இராமலிங்கம் குலசேகரம்பிள்ளை

அன்னை மடியில் : 26 நவம்பர் 1930 — ஆண்டவன் அடியில் : 20 மார்ச் 2018
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 8ம் வட்டாரம் மடத்துவெளி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் குலசேகரம்பிள்ளை அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு அமராவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரேமராணி(கனடா), கலாராணி(ஆசிரியை- கொழும்பு), மிதிலாராணி(கனடா), காலஞ்சென்ற பாஸ்கரன், முரளிகரன்(விவசாயத் திணைக்களம்- யாழ்ப்பாணம்), அனுராகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, மயில்வாகனம், தம்பிப்பிள்ளை(ஆசிரியர்), முத்துச்சாமி, நடராசா, செல்லையா, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயகுமார்(கனடா), சுரேஷ்குமார்(குடிவரவு குடியகழ்வுத்திணைக்களம்- கொழும்பு), துரை ரவீந்திரன்(கனடா), மதிவதனி(ஆசிரியை- யாழ்ப்பாணம்), நளினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு(வர்த்தகர்- நுவரெலியா), சிவக்கொழுந்து, நாகம்மா, வரராஜசிங்கம்(முன்னாள் அதிபர்), மனோன்மணி, கனகாம்பிகை(முன்னாள் ஆசிரியை), கைலாயநாதன் மற்றும் தனபாலசுந்தரம்(முன்னாள் ஆசிரியர்), திருஞானம்(கிராம சேவை அலுவலர்- முல்லைத்தீவு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ஞானம்மா(முன்னாள் ஆசிரியை), திருநாவுக்கரசு, சண்முகநாதன்(C.O), ஞானவல்லி(முன்னாள் ஆசிரியை), சந்திரகுமாரி(ஆசிரியை- முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புச் சகலனும்,
வைதினி, வைஷ்ணவி, கிஷாஜினி, துஷாஜினி, சாயுகன், அபிஷேக், சௌமியா, அகிஷன், அரண்யா, சரண்யா, வைநிலா, ஆரன், சபரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-03-2018 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 25-03-2018 ஞாயிற்றுகிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
25, Suvisudharama Road,
W. Silva MW,
Wellawatta,
Colombo-06
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுரேஷ்குமார் — இலங்கை
செல்லிடப்பேசி:
+94112367488
முரளிகரன் — இலங்கை
செல்லிடப்பேசி:
+94777185932
திருஞானம் — இலங்கை
செல்லிடப்பேசி:
+94775203116
அனுராகரன் — கனடா
செல்லிடப்பேசி:
+16472166268
விஜயகுமார் — கனடா
செல்லிடப்பேசி:
+14167109595
துரை ரவீந்திரன் — கனடா
தொலைபேசி:
+19052708555
செல்லிடப்பேசி:
+14168414215