ரணில் நரி வேலை செய்கிறார்; சொன்னது யார் தெரியுமா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அருகில் இருப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியோ அருகதையற்றவர்கள் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு நரி என்றும் அவர் செய்யும் வேலை நரி வேலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவாகிய உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெற்றது.

அப்போது அந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் கட்சியின் செயலாளருக்கு அதிக அதிகாரம் இருக்கிறது.

அதாவது யாராவது உறுப்பினர் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக செயற்படுவதாக கருதினால் கட்சி அவரை நீக்குவதற்கு சட்டம் இருக்கிறது. இதனை அனைவரும் நினைவில் வைத்திருங்கள்.

கடந்த தேர்தலில் நாங்கள் எல்லோரும் ஒரு கட்சிக்கு எதிராக அதனை நோக்கியே செயற்பட்டோம்.

அந்தக் கட்சியைத் தான் கருத்தில் எடுத்தோம். ஆனால் சுயேட்சை உட்பட 9 கட்சிகள் இங்கு போட்டியிட்டு இருந்தன. ஒரு கட்சி சாதி அமைப்பை முன்னிறுத்தி வாக்குகளை எடுத்து வேண்டி வைத்திருக்கின்றது.

அதற்கு நாங்கள் தீர்க்கமான பதிலைக் கொடுக்க வேண்டும். இப்போது நான் அந்தக் கட்சியின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை.

மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் எங்களுக்கு பக்கத்தில் இருப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியோ, சுதந்திரக் கட்சியோ அருகதையற்றவர்கள் என்று மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றேன்.

நான் 1982 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இங்கு தான் இருக்கின்றேன். வேறு எங்கும் நான் போகவில்லை. நடந்த ஒவ்வொன்றையும் அருகிலிருந்த பார்க்கின்றேன். இதில் பணத்திற்கு விலை போனது தான் வருந்த தக்க செயற்பாடு.

நாங்கள் எங்களது வட்டாரங்கள் மட்டுமல்ல எங்களுக்கு கிடைக்காத வட்டாரங்களையும் கூட கவனிக்க வேண்டும். அதற்கமைய அடிக்கடி அவர்களை சந்திக்க வேண்டும்.

தற்போது ஒரு கட்சியினர் மூலைச்சலவை செய்யத் தொடங்கிவிட்டார்கள். அவர்களை இத் தேர்தலில் பார்ப்போமானால் கிட்டத்தட்ட 86 உறுப்பினர்களைத் தான் பெற்றிருக்கின்றனர். அதாவது மூன்றில் ஒன்று தான் பெற்றுள்ளனர்.

ஆனால் ஐ.தே.க 92 போனது ஏற்றுக் கொள்ள முடியாது. சிறிலங்க சுதந்திரக் கட்சிக்கும் போயுள்ளது.

பிரதமர் செய்யும் வேலை நரி வேலை என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். தேர்தல் கடைசி நிமிடத்தில் காசை அள்ளிக் கொட்டினார். அந்த விடயம் பின்னர் தான் எமக்கு தெரிய வந்தது.

ஆகவே இது குறித்த ஐனாதிபதி மற்றும் பிரதமருடன் நேரடியாக கதைக்க வேண்டும்.

இந்த மாதிரியான வேலைகளைச் செய்வதாக இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாது என்பதையும் தெளிவாகச் சொல்லப்ப வேண்டும்.

தற்போது அதற்கான வேலைகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சி தொடங்கியிருக்கின்றதாக நான் அறிகின்றேன்.

இவற்றையெல்லாம் நடாளுமன்றக் கூட்டத்தில் சொல்லுவோம். தலைவர்கள் பேசுகின்ற அதேவேளையில் நாங்களும் தான் பேச வேண்டும.

ஆகவே அவர்களுக்கு இதுவொரு களமாக அமையக் கூடாது. ஆளுநரும் இதனைச் செய்கின்றார்.

எனவே அவர்கள் தங்களிடம் பணம் இருக்கிறது என்பதால் எல்லாவற்றையும் செய்யலாம் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள்.

நாங்கள் இவை எல்லாவற்றையும் தான் எதிர்த்துக் கொண்டிருக்கின்ற சூழல் இருக்கின்றனது என சரவணபவன் மேலும் தெரிவித்தார்.

Allgemein