கட்டுநாயக்கவில் சிக்கிய பெருந்தொகை டொலர்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாக்கும் அதிகமான டொலர் தொகை சிக்கியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

103,85,000 ரூபா பெறுமதியான அமெரிக்க டொலரை தாய்லாந்து நோக்கி கொண்டு செல்ல முயற்சித்த கெசினோ விளையாட்டு வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் தாய்லாந்து பேங்கொக் நகர வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ளும் ஒருவராகும்.
குறித்த நபர் இலங்கையில் கெசினோ விளையாடுவதற்காக வருகைத் தருவதாகவும் தெரியவந்துள்ளது.

Allgemein