போதைப் பொருள் விவகாரம்: டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு!

போதைபொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 20 லட்சத்து 40 ஆயிரம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக கூறப்படுகிறது.

2016ஆம் ஆண்டில் மட்டும் நாளொன்றுக்கு 115 பேர் போதை மருந்துக்கு உயிரிழந்ததாக அந்நாட்டின் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நியூஹாம்சயரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய டொனால்ட் ட்ரம்ப்,
போதைபொருள் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரத்தை வீணாக்க மாட்டோம் என்று கூறினார்.
அதுமட்டுமல்லாது போதைபொருள் கடத்தல்காரர்களுக்கு, மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என டிரம்ப் கூறியுள்ளார்.

உலகச்செய்திகள்