மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 30வதுபோட்டி !

மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 30வது இளைஞர் விளையாட்டுப் போட்டி நிகழ்வு மாமாங்க ஆலய பின் முன்றலில் சம்மேளன தலைவர் S.ஸஜித் இன் தலைமையில் இன்று ஆரம்பமானது.

மேற்படி விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான கையிறு இழுத்தல் மற்றும் கபடி போட்டிகளை மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்த்தர் ர.பிரவீனிண் வழிகாட்டலின் கீழ் அமிர்தகளி இளைஞர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடாத்திமுடிக்கப்பட்டது.

கையிறு இழுத்தல் போட்டியில் ஆடவர் பிரிவில் Fun-Guys இளைஞர் கழகமும் மகளிர் பிரிவில் அமிர்தகளி இளைஞர் கழகமும் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டனர் மற்றும் கபடி போட்டியில் ஆடவர் பிரிவில் Tvs இளைஞர் கழகம் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.

சாம்பியன் பட்டத்தை வென்ற அணிகள் மேலும் மாவட்ட மட்டத்திலும் சாம்பியன் பட்டத்தை வென்றெடுக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

போட்டிகளை நடாத்தி முடிக்க சகல வகையிலும் உதவி வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்.

Allgemein