போரில் பங்கேற்ற இலங்கைப் படையினர் அமைதிப்படையில் இணைய முடியாது! – ஐ.நா கதவடைப்பு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பங்கேற்ற எந்தவொரு இலங்கைப் படை வீரரையும் ஐ.நா அமைதி காக்கும் படையில்ணி பணியாற்ற அனுமதிக்கப் போவதில்லை என ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளில் இலங்கைப் படையினர் பங்கேற்க வேண்டுமாயின் அந்தப் படையினர் கடமையாற்றிய முகாம் மற்றும் பிரதேசம் தொடர்பிலான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.போரின் பின்னர் இலங்கைப் படையினர் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக விண்ணப்பிக்கும் போது, போரில் நேரடியாக பங்கேற்றவர்களின் பெயர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு நீக்கி வருகின்றது.

குறிப்பாக கொமாண்டோ படைப்பிரிவு, புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட சில பிரிவுகளில் கடமையாற்றிய படையினர் அமைதி காக்கும் பணிகளுக்காக உள்வாங்கப்படுவதில்லை. இலங்கைப் படையினர் தொடர்பிலான இந்த நிபந்தனையானது உத்தியோகப்பற்றற்ற ரீதியான தடையாகவே கருதப்பட வேண்டுமென பாதுகாப்பு தரப்பினர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மறுபுறத்தில் போரில் ஈடுபட்ட அனைத்துப் படையினரும் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவே ஐக்கிய நாடுகள் அமைப்பு கருதுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். இராணுவப் பயண உத்தரவு ஆவணமானது படைவீரர் ஒருவருக்கான நியமனக் கடிதத்திற்கு நிகரானது எனவும், இந்த ஆவணத்தை ஐக்கிய நாடுகள் கோருவது தவறானது என தெரிவித்துள்ளனர்.

Allgemein