அறிமுகமாகிறது அவுஸ்திரேலியாவில் புதிய வீசா!

180,000 டொலர்களுக்கும் மேலாக ஊதியம் பெறும் ஊழியர்களை அவுஸ்திரேலியாவிற்கு வரவைப்பதற்கும் குடியேற்றவும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் நடவடிக்கையாக ஒரு புதிய வீசாவை அரசு உருவாக்குகிறது.

STEM என்று அறியப்படும் விஞ்ஞானம், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில், சிறந்த திறமைகளைத் தேடும் புதிய நிறுவனங்கள் ஊழியர்களைக் கவர்வதற்காக இந்த புதிய வீசா அறிமுகமாகிறது.

இதேவேளை 3 ஆண்டுகால முன் அனுபவமுள்ளவர்களுக்கு மட்டுமே இந்த இரண்டு வீசாக்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியத் தொழிலாளர்களுக்கு அவர்கள் திறமைகளைப் பரிமாற்றம் செய்ய இது ஏதுவாக அமையும் என கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது அவுஸ்திரேலிய வணிகங்களை வளர்க்கவும் இந்த திட்டம் உதவும் எனவும் அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு தனிப்பட்ட நிறுவனம் எத்தனை பேரை இந்த வீசா மூலம் அவுஸ்திரேலியாவிற்கு வரவழைத்து, பணிக்கமர்த்தலாம் என்பதில் ஒரு உச்ச வரம்பு இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக ஆரம்பிக்கப்படும் நிறுவமானது ஒரு வருடத்தில் அதிகப்படியாக ஐந்து பேரையும், 20 திறமை வாய்ந்தவர்களை $180,000 சம்பளத்தில் மற்றைய நிறுவனங்களும், ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துவரும் வீசா பெற்றுக் கொடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

புதிதாக ஆரம்பிக்கப்படும் நிறுவனம் இதற்குத் தகுதி பெற்றுள்ளதா என்பதனை அந்தத் தொழில்சார் அமைப்பு (industry body) தீர்மானிக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.