பூமிக்கு ஆபத்தா ? நாசா விண்வெளி மையத்தின் புதிய திட்டம்!

பூமிக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய எரிகல் ஒன்றை விண்ணிலேயே அடித்து நொருக்க நாசா விண்வெளி மையத் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களை விண்கல் அல்லது எரிகல் என்று அழைக்கின்றோம். பூமியை நோக்கி வரும் போது அவைகள் எரிந்து சாம்பலாகின்றன. ஆனால் சில எரிகற்கள் மட்டும் பூமியில் வந்து விழுகின்றன.

அதனால் பூமியில் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. தற்போது 73 எரிகற்கள் சூரியனை சுற்றி வருவதாககவும் அவ்றில் சில பூமியை தாக்கும் அபாயம் உள்ளதாகவும் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.

தற்போது “பென்னு” என்ற மிகப்பெரிய எரிகல் சூரியனை சுற்றி வருகின்றது. 1600 அடி அகலம் கொண்ட அந்த விண்கல் மணிக்கு 63 ஆயிரம் மைல் வேகத்தில் சூரியனை சுற்றி வருகின்றது. அந்த விண்கல் தற்போது பூமியில் இருந்து 5 கோடியே 40 லட்சம் மைல் தொலைவில் உள்ளது.

குறித்த விண்கல் பூமியை தாக்கினால் கடும் பாதிப்பு ஏற்படும். எனவே கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் இதன் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பென்னு என்ற எரிகல்லை விண்ணிலேயே அடித்து உடைத்து நொருக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக மிகப்பெரிய அணு விண்கலம் தயாரிக்கப்பட உள்ளது. அதற்கு ‘கேமர்’ (சுத்தியல்) என பெயரிடப்பட்டுள்ளது. பென்னு எரிகல் மட்டுமின்றி மற்ற எரிகற்களை உடைத்து நொருக்கவும் இந்த
கேமர் அணு விண்கலம் பயன்படுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Allgemein