சுவிட்சர்லாந்து பனிச்சரிவு.. நான்கு பேர் மரணம்?

Vallon d’Arbi இல் உள்ள பனிச்சறுக்கு பகுதியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் பிற மூன்று பேரை தேடும் பணி தொடர்கிறது.
சனிக்கிழமை அதிகாலை 3:30 மணி வரை தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தது என்றும், பின்னர் காலை 9 மணியளவில் மீண்டும் தேடுதல் நடவடிக்கை துவங்கியது எனவும் Valais காண்ட்டன் போலீஸார் தெரிவித்தனர்.

„இரவில், ஒரு உடல் மீட்கப்பட்டது. முறையான அடையாளம் காணும் செயல்முறை தொடர்கிறது,“ என பொலிஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
காணாமல் போன மூவருள் இருவர் சுவிஸ் நாட்டுக்காரர்கள் மற்றும் ஒருவர் பிரஞ்சு நாட்டுக்காரராக அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
Vallon d’Arbi திறமையான skiers க்கு மிகவும் பொருத்தமான ஒரு பாதை, இது பாதுகாப்பு காரணங்களுக்காக அவ்வப்போது மூடப்படும்.
வெள்ளிக்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டபோது அந்த பாதை திறந்திருந்தது என போலீஸ் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதம் சுவிஸ் ஆல்ப்ஸ் பகுதியில் பனிச்சரிவு காரணமாக மூன்று பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்த பருவத்தில் சுவிஸ் நாட்டில் உள்ள skiers-களை இத்தகைய தொடர் மரண சம்பவங்கள் பெரிதும் பாதிக்கின்றன.

Allgemein