சற்று முன் : 23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் – தெரேசா மே அதிரடி முடிவை எட்டியுள்ளார்…

சற்று முன் பிரித்தானிய பாராளுமன்றில் உரையாற்றிய பிரதமர் தெரேசா மே, தங்கள் நாட்டு அனுமதியோடு பிரித்தானியாவில் இருக்கும் 23 அதிகாரிகளை தான் நாடு கடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர்கள் சில உளவு வேலைகளை பார்த்தும் வந்துள்ளார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை கொண்டுவருவது தொடர்பாக விரியாவ ஏனைய நாடுகளோடு ஆராய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இக் கருத்துக்களுக்கு உடனடியாக தனது கடும் எதிர்ப்பை மொஸ்கோ வெளியிட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க, ரஷ்யாவில் பணி புரியும் பிரித்தானியர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்ற அறிவித்தலை மொஸ்கோவில் உள்ள பிரித்தானிய தூதுவராலயம் வெளியிட்டுள்ளது. தெரேசா மே அம்மையாரின் இந்த அறிவித்தல், மிகக் கடுமையாக உள்ளதால், ரஷ்ய அதிபர் புட்டின் கடும் ஆத்திரம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை பிரித்தானியாவில் சுமார் 14 ரஷ்யர்கள் இறந்துள்ளார்கள் என்றும்.
இது நாள் வரை அது சாதாரண சம்பவம் என எண்ணி வந்த பொலிசார். குறித்த 14 பேரது மரணத்தையும் சந்தேகிக்கிறார்கள். இதனால் 14 வழக்குகளை அவர்கள் பதிவு செய்து இந்த மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது.

உலகச்செய்திகள்