லண்டன் மியூசியத்தில் தமிழன்! பிரபல நடிகருக்கு கெளரவம்…..

பிரபல திரைப்பட நடிகரான சத்யராஜ் லண்டன் மியூசியத்தில் இடம்பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் பெற்ற ஷங்கரையே மலைக்க வைத்தவர் தான் எஸ்.எஸ்.ராஜமௌலி.

இவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் சக்கை போடு போட்டது.

அந்த படத்தில் குறிப்பாக நடிகர் பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், நடிகை அனுஷ்கா மற்றும் சத்யராஜ் ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர்.

இதற்காக அவர்களுக்கு பல விருதுகள் கிடைத்து. அதுமட்டுமின்றி சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் படத்திற்கே திருப்புமுனை வாய்ந்ததாக அமைந்தது.

இந்நிலையில் பாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே கிடைத்த கவுரவம் நடிகர் சத்யராஜுக்கு கிடைத்திருக்கிறது.

லண்டனில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியம், சத்யராஜின் கட்டப்பா போன்ற மெழுகு சிலையை வைத்து கெளரவப்படுத்தியுள்ளது.

லண்டனின் மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் தமிழ் நடிகர் ஒருவரின் மெழுகுச்சிலை இடம்பெறுவது இதுவே முதல்முறை ஆகும்.

உலகச்செய்திகள்