முஸ்லிம்களை அதிகம் கொண்ட யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதிக்கு வந்து திரண்ட பிக்குகளால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
நேற்றுமுன்தினம் இரவு ஐந்து சந்திப் பகுதிக்குச் சுமார் 15 வரையான பிக்குகள் வந்ததுடன் அங்குள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் சிறிது பதற்றம் நிலவியது. சம்பவத்தை கேள்வியுற்ற யாழ்ப்பாண பொலிசார் அப்பகுதிக்கு விரைந்து வந்ததுடன் அந்த இடத்தில் காவல் கடமையிலும் ஈடுபட்டனர்.
நாட்டில் சிங்கள –முஸ்லீம் மக்களிடையே கலவரங்கள் இடம் பெற்றுள்ள இந்த வேளையில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிக்கு ஏன் வந்தார்கள் என்பது தொடர்பான தகவல்கள் தெரிய வரவில்லை.