ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்…. பயணியின் சட்டவிரோத செயல்!

சென்னை விமான நிலையத்தில், கடந்த, 10 நாட்களில், சுங்கத்துறை அதிகாரிகள், விமான பயணியரிடம் நடத்திய சோதனையில் 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான, வெளிநாட்டு நாணயத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தெரியவருவதாவது,

சென்னையில் இருந்து, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, இலங்கைத் தலைநகர் கொழும்பு செல்லும், ‘ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்’ விமானம் புறப்பட தயாராக இருந்தது.

அந்த விமானத்தில் செல்ல வந்த, ஜெர்மன் நாட்டு குடியுரிமை பெற்ற, திருநாவுக்கரசு, 59, என்ற பயணியின் பயணப்பையை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது, துணிகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, இந்தியா மதிப்பில், 28 லட்சம் ரூபாய் பெறுமதியான யூரோ நாணயத்தாள்கள் இருப்பது தெரியவந்தது.

திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவர் இலங்கையரா என்பது தெரியவரவில்லை.

சென்னை விமான நிலையத்தில், கடந்த, 10 நாட்களில், மொத்தம், 1.4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகளும், 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான, வெளிநாட்டு கரன்சிகளும், கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Allgemein