அவுஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து வெளியேறிய இலங்கை அகதிகள்!

அவுஸ்திரேலியாவின் நவுரூ தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

29 பேர் கொண்ட இந்தக் குழுவில்  இலங்கையைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள், ரோஹிங்யா நாட்டைச் சேர்ந்த குடும்பம் ஒன்று, ஆப்கானிஸ்தான் குடும்பம் ஒன்று மற்றும் இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த தனி நபர்கள் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நவுரூ தடுப்பு முகாமிலிருந்து இவர்கள் விமானம் மூலம் நேற்று (04) அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்தக் குழுவில் எட்டுக் குழந்தைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியா தடுப்பு முகாம்களில் உள்ள 1250 புகலிடக் கோரிக்கையாளர்களை தமது நாட்டில் குடியேற்ற அமெரிக்கா இணங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, ஐந்தாவது தொகுதி அகதிகள் தற்போது அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.