மாமனிதர் s.g சாந்தன் அவர்களின்நினைவஞ்சலி யாழில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது

இறைபதம் அடைந்த எம் தந்தை ஈழத்துகுயில் மாமனிதர் s.g சாந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு 26.02.2018 நேற்றயதினம் மிலேனியம் நிறுவனத்தாரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது‘ அன்னாரின் கலைவாழ்வு தொடர்பான ‚காலத்தின் குரல்‘ எனும் நூலும்‘ அவரின் நினைவு தாங்கி ஈழத்தின் அனைத்து இசைகலைஞர்களும் அவர்மேல் கொண்ட பற்றினாலும் அன்பினாலும் அவரின் பிரிவின் துயரிலும் பாடிய பாடல்கள் யாவற்றையும் தொகுத்து ‚ காற்றில் கலந்த காவியக்குரலோன்‘ எனும் நினைவுப்பாடல்கள் அடங்கிய இறுவெட்டும் வெளியீடு செய்துவைக்கப்பட்டது‘ இன்நிகழ்வில் ஈழத்தின் மூத்தகலைஞர்களும்,இளம்கலைஞர்கள் பலரும் அன்பு உள்ளங்கள் யாவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதோடு அவரோடு இருந்த உறவினையும் அவரின் சிறப்புக்களையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்‘ இதே நாளில் மறைந்த ஈழத்தின் பிரபல பேஸ்கிற்றார் வாத்தியக்கலைஞர் தோமாஸ் அண்ணா அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது‘

 

நினைவஞ்சலி