மந்திரி மனை – யாழ்ப்பாணம்

யாழ்பாணத்தில் போர்த்துகீசர் காலத்துடன் தமிழர் அரசாட்சி நிறைவுக்கு வருகின்றது.யாழ் இராசதானியின் நினைவுகளை சுமக்கும் எஞ்சியிருக்கும் சுவடுகளில் இந்த மந்திரி மனையும் சங்கிலியின் அரன்மனையும் முக்கிய சின்னங்கள்.

மந்திரி மனை

யாழ்ப்பாணம் ,நல்லூர் ,பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் கோயிலுக்கு சற்றுத் தெற்காக  பாரம்பரிய வரலாற்றை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது மந்திரி மனை.
இதன் கட்டட அமைப்பும் மரத்தாலான சிற்ப வேலைப்பாடுகள் நூதனமான கலை மரபை எடுத்துக்காட்டுகின்றன.

மந்திரி மனை - மரவேலைப்பாடு

பல ஆய்வாளர்களின் கருத்து படி இது சுதேச கட்டிடமாயினும் ஒல்லாந்தர் காலத்திலும் அதற்கு பின்னரும் இதில் திருத்த வேலைகள் இடம்பெற்று இருகின்றன.காரணம் ஒல்லாந்த கால கட்டிட சாயலும் ,முறைகளும் இந்த கட்டிடத்தில் கலந்து இருகின்றன.

மந்திரி மனை - யாழ்ப்பாணம்

சொல்ல போனால் தமிழர் ராச்சியத்தின் சின்னம் ஒன்று கொஞ்சம் உருக்குலைப்பு உள்ளாகி இருக்கிறது.

இங்கிருந்து ஜமுனா ஏரிக்குப் போவதற்கான சுரங்கப்பாதை காணப்பட்டதாகவும் செவி வழியாக சொல்லபடுகின்றது.ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை.

2013 இல் இவ்வளவில் இடம்பெற்ற நிர்மாணங்கள் மேலும் இவ் வரலாற்று சின்னத்தை மேலும் சிதைத்தது.

மந்திரி மனை

இங்கு பிற்காலத்தில் காலனித்துவ ஆட்சியாளர்களின் பிரதி நிதிகளான கவனர்கள் வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

இருந்தாலும் சரியான ஆதாரங்கள் இல்லாத சந்தேக தன்மை இது உண்மையான மந்திரி மனை தானா ? என்ற கேள்வியை சிலர் எழுப்ப காரணமாகி விட்டது.யாழ் ராசதானி இறுதிக்கட்டம் ,பண்டாரவன்னியன் இறுதிக்கட்டம் முல்லை தீவு பகுதியில் இடம்பெற்றதுடன் தொடர்பு படுத்தி பார்த்ததால் ஒல்லாந்த காலத்துக்கு முன்னே வலுவிழந்து வன்னி நோக்கி நகர்ந்த காரணத்தால் ஆதாரங்களும் முற்றாக அழிந்து இருக்கலாம்.

பிற்கால கட்டிடங்கள் ஆதாரங்களை மறைத்து இருக்கலாம்.