புலம்பெயர் தமிழர்களுக்கு பயப்படும் நாமல்?

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச லண்டனுக்கான விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழர்களுக்கு பயந்து தனது விஜயத்தினை இரகசியமாக பேணி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுநலவாய மாநாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச லண்டன் சென்றுள்ளார்.

தனது பயணம் தொடர்பில் அவர் இரகசியம் காப்பதாகவும், தனது நடவடிக்கைகள் அனைத்தையும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பதிவிடும் நாமல் இந்த பயணம் தொடர்பில் இரகசியம் காப்பது புலம்பெயர் தமிழ் மக்களுக்கு பயந்துதான் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர் லண்டன் சென்றிருக்கும் தகவல் புலம்பெயர் தமிழர்களுக்கு தெரிந்தால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

அத்துடன், இவருக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் போராட்டங்களை நடத்தலாம் என எண்ணியே அவரது பயணம் தொடர்பில் இரகசியம் பேணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், லண்டன் பயணம் தொடர்பில் எவ்வித புகைப்படங்களும் வெளியாகாத நிலையில் லண்டன் விமான நிலையத்தில் ஒருவருடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று மட்டும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Allgemein