பாதி வழியில் அவசரமாக தரை இறக்கப்பட்ட சுவிஸ் விமானம்!!

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் இருந்து சூரிச் வந்த விமானமானது பாதி வழியில் அவசரமாக தரையிறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் இருந்து LX1957 என்ற விமானம் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளது.

இந்த நிலையில் விமானத்தின் காக்பிட்டில் இருந்து வித்தியாசமான வாசம் வெளிவந்ததாக கூறப்படுகிறது. மட்டுமின்றி கட்டுப்பாட்டு கருவிகளில் இருந்து எச்சரிக்கை செய்தியும் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட விமானிகள் உடனடியாக பிரான்ஸ் நாட்டின் மார்ஸைல் நகர விமான நிலையத்தில் குறித்த விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளனர்.

இருப்பினும் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தொடர்பில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

பயணிகள் அனைவரையும் மார்ஸைல் நகரில் உள்ள ஹொட்டேல் ஒன்றில் தங்க வைத்துள்ளதாகவும்,

வெள்ளியன்று காலை வேறு விமானத்தில் பயணிகள் அனைவரும் சூரிச் நகருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என சுவிஸ் விமான சேவை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

உலகச்செய்திகள்