15 பேருடன் வெளியேறி எதிரணிக்கு வருவேன் – உறுதியளித்த சுசில்

வாரஇறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி இல்லாத அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்கத் தவறினால், தாம் உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு எதிரணிக்கு வந்து விடுவோம் என்று அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த உறுதியளித்துள்ளார்.

சுதந்திரக் கட்சின் தேசிய அமைப்பாளரான சுசில் பிரேமஜெயந்த கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நடத்திய சந்திப்பின் போதே, இந்த உறுதிமொழி வழங்கியுள்ளார்.

தற்போதைய கூட்டு அரசாங்கம் மக்களின் ஆணையை இழந்து விட்டது. எனவே, அதிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த மகிந்த ராஜபக்ச அனைவரையும் தாம் வரவேற்பதாக குறிப்பிட்டார்.