இனப்படுகொலைக்கு நீதி வேண்டிய ஜெனீவா பேரணி 12/03/2018

அன்பார்ந்த பெல்ஜியம் வாழ் தமிழ்மக்களுக்கு!
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கியநாடுகள் சபை முன்றலில்
சிறீலங்கா அரசின் இனப்படுகொலையை வலியுறுத்தி, இனப்படுகொலைக்கு நீதி வேண்டிய பேரணி வருகின்ற மாதம் 12/03/2018 திங்கட்கிழமை நடைபெற இருக்கின்றது. இந்த பேரணிக்கு தமிழர் ஒன்றியம் பெல்ஜியம் மக்கள் அமைப்பு நிர்வாகமும், பெல்ஜியம் வாழ்தமிழ்மக்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். ஐக்கிய நாடுகள்சபை முன்றலில் சிங்கள அரசு தமிழ்மக்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டி உங்கள் குரலும் ஒலிக்கவேண்டும் என விரும்பினால் உடனடியாக நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு 28/02/2018 முன்பு உங்கள் வரவை உறுதிப்படுத்துமாறு அன்புடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். உங்களுக்கான வாகன ஒழுங்குகள் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்பதனையும் அன்புடன் அறியத்தருகின்றோம்..
நிர்வாகம்

தாயகச்செய்திகள்