இன்னும் சில நாட்களில் நான் இறந்து விடுவேன்!! – ரணில்

19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் பிரதமரை நீக்குவதற்கான ஏற்பாடுகள் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தள்ளார்.

இன்னும் சில நாட்களில் நான் மரணித்துவிடலாம். மரணித்து விடக்கூடும். அப்படி ஏற்பட்டால் பிரதமர் பதிவிக்கு வேறொருவரை நியமிக்க முடியும். பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்வதற்கான காரணங்கள் எதுவுமில்லை என பிரதமர் கூறியதை கேட்டு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சங்கடத்துக்குள்ளாகியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு முடிவடைந்ததை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை பிரதமர் சந்தித்தார்.

ரணில் விக்கிரமசிங்க என்ன முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தவர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க கூறியு முதல் வார்த்தையே அவர்களை முகம் சுருங்க செய்துள்ளது.

அவர் கூறியதாவது,

“19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் பிரதமரை நீக்குவதற்கான ஏற்பாடுகள் இல்லை. இன்னும் சில நாட்களில் நான் மரணித்துவிடலாம். மரணித்து விடக்கூடும். அப்படி ஏற்பட்டால் பிரதமர் பதிவிக்கு வேறொருவரை நியமிக்க முடியும். பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்வதற்கான காரணங்கள் எதுவுமில்லை.

நான், இராஜினாமாச் செய்யமாட்டேன். இடம்பெற்ற தவறுகளை திருத்திக்கொண்டு, இளைஞர்கள், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்து, கடந்த மூன்று வருடங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்திச் செய்யவேண்டும்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்போது அங்கிருந்த கட்சி உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவை பெருமையாக பேசியுள்ளதோடு இவ்வாறான ஒரு தலைவரின் கீழ் பணிப்புரிவது பெருமையாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Allgemein