உலகிலேயே மிகப் பெறுமதி வாய்ந்த காரை கொள்வனவு செய்த இலங்கையின் கோடீஸ்வரர்!!

லம்போகினி கார்களை விட பல மடங்கு விலைமதிப்புள்ள பெண்ட்லி ரக கார் ஒன்றை இலங்கையின் கோடீஸ்வரர் ஒருவர் கொள்வனவு செய்துள்ளார்.இலங்கையின் தற்போதைய முதல்நிலை பணக்காரரான தம்மிக்க பெரேரா என்பவரே குறித்த பெண்ட்லி ரக கார் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளதுடன், கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக கடந்த 14ம் திகதி இலங்கைக்குள் காரைக் கொண்டு வந்துள்ளார்.

இவர் கொள்வனவு செய்துள்ள கார் முல்சோன் ஹொல்மாக் வகையைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது.பெண்ட்லி ரக கார்கள் ஒரே ரகத்தில் ஐம்பது கார்கள் மட்டுமே தயாரிக்கப்படும் என்பதால் அதற்கு தனி கிராக்கியும் பெரும் போட்டியும் நிலவுகின்றது.

இந்நிலையில், இலங்கை வர்த்தகர் ஒருவர் அவ்வாறான கார் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.தம்மிக்க பெரேரா கொள்வனவு செய்துள்ள பெண்ட்லி காரின் விலை சுமார் 160 மில்லியன் ரூபாவாகும். ஆசியக் கண்டத்திலேயே தற்போதைக்கு மூன்றே மூன்று பெண்ட்லி ரக கார்கள் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.