யாழில் பெண்ணொருவரின் மனிதாபிமானம்!

யாழ்ப்பாணத்தில் தவற விடப்பட்ட தங்க நகை மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் அநாதரவாகக் கிடந்த கைச்சங்கிலி ஒன்றே இவ்வாறு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுமார் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைச்சங்கிலியை கண்டெடுத்த பெண் ஊழியர், அதனை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைந்துள்ளார்.

வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்த பெண்ணொருவர் அணிந்திருந்த கைச்சங்கிலி தவறி வீழ்ந்ததை அவதானிக்காமல் சென்றுள்ளார்.

வைத்தியரிடம் கையொப்பம் பெறச் சென்ற பெண் பரிசாரகர் கதவுடன் கைச்சங்கிலி காணப்பட்டதையடுத்து அதனை எடுத்து வைத்தியரிடம் காண்பித்துவிட்டு மேற்பார்வையாளர் ஊடாக நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்துள்ளார்.

எனினும் நகையைத் தேடிவந்த பெண், உரிய ஆதாரங்களை சமர்பித்து கைச்சங்கிலியை பெற்றுக்கொண்டார்.

நகையைத் தவறவிட்டவர் கண்டெடுத்த பெண் பரிசாரருக்கு அன்பளிப்பு வழங்க முன்வந்த போதிலும் அவர் அதனை வாங்க மறுத்துவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

பெண் பரிசாரகரின் நேர்மையான குணத்தை வைத்தியசாலை அலுவலர்கள் சக பணியாளர்கள் மட்டுமன்றி வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்த மக்களும் பாராட்டினர்.

Allgemein