ரணில் தலைமைக்கு அதரவு இல்லை என்கிறார்.. டிலான் பெரேரா!!

கத்தை முன்நோக்கிக் கொண்டுச் செல்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடும் விசேட அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்துள்ளது.

குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

குறித்த அமைச்சரவை கூட்டத்தினைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட உள்ளதாகவும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் முக்கிய சில தீர்மானங்கள் கலந்துரையாடலின் போது மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் டிலான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை வகிக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் சுதந்திர கட்சி தொடர்ந்தும் இருப்பதாகவும் டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

Allgemein