முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் வெடி விபத்து

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வெடி விபத்தில் பல குடியிருப்புகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பை கூளத்திற்கு தீயிட்ட போது அதிலிருந்த ஆர்.பீ.ஜி ரக வெடி குண்டே இவ்வாறு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெடிப்பு காரணமாக எவருக்கும் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

முள்ளிவாய்க்கால் பிரதேச வாசியினால் தமது தோட்டத்தில் இருந்த குப்பை கூளம் சேகரிக்கப்பட்டு அதற்கு தீ மூட்டப்பட்டுள்ள நிலையில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Allgemein