கணித வினாடி வினா போட்டியில் சாதனை படைத்த கனடா வாழ் தமிழ் சிறுவன்!

கனடாவின் Ajax நகரில் உள்ள Michaelle Jean பள்ளியில் தரம் 5 இல் கல்வி கற்று வரும் மாவன் நிலக்சன் ராஜ்குமார். இவர் தரம் 2 இல் படிக்கும் போதே பள்ளியில் பயிலும் கணிதத்தில் திருப்தி அடையாமல் தனியாக UCMAS என்னும் கணித வகுப்புக்கு சென்றுள்ளார்.

UCMAS என்பது கடினமான கணக்குகளை கால்குலேட்டரைப் பயன்படுத்தாமல் மனக்கணக்கில் செய்ய பயிற்றுவிக்கும் ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பில் பல வருடங்களாக கல்வி கற்கும் நிலக்சன் ராஜ்குமார் பல தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறான்.

இந்நிலையில் தற்போது 10 வயதில் உள்ள நிலக்சன் ராஜ்குமார் கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச கணித வினாடி வினா போட்டியில் 8 நிமிடங்களில் 200 கேள்விகளுக்கு பதிலளித்து சாதனை படைத்துள்ளான்.

ஏற்கனவே பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தாலும் இது அவன் பங்கு பெறும் முதலாவது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக குறித்த மாணவன் கூறுகையில் :- எனக்கு கொஞ்சம் பயமாகவும் படபடப்பாகவும் இருந்தது. ஆனாலும் விசில் சத்தம் கேட்டதும் படபடவென்று கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். எனக்கு ஒரே ஒரு கேள்விக்கான பதில் தெரியாததால் அதை மட்டும் விட்டுவிட்டு மற்றைய கேள்விகளுக்கு பதிலளித்தேன் என தெரிவித்துள்ளான்.

உலகச்செய்திகள்