ஜனாதிபதியின் செயற்பாடு கண்டனத்துக்குரியது என்கிறார்-எம்.ஏ.சுமந்திரன்!!

நாட்டில் தேர்தல் நெருங்கிவரும் சந்தர்ப்பத்தில் சிங்கள கடும்போக்காளர்களை திருப்திப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 04ம் திகதி லண்டனில் தமிழர்களை அச்சுறுத்தியுள்ள பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவை தூதரக பதவியில் தொடர ஜனாதிபதி அனுமதித்திருப்பதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிவிவகார அமைச்சால் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரை மீண்டும் பணியில் இணைந்துக்கொள்ள அனுமதியளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

மிகவும் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவை பணி இடைநிறுத்தம் செய்வதற்கு வெளிவிவகார அமைச்சு எடுத்த முடிவானது சரியானது எனக் குறிப்பிட்ட கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் பணி இடைநிறுத்தத்தின் பின்னரே விசாரணை இடம்பெற வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாயகச்செய்திகள்