கொடிய அரக்கன் பிரியங்க பெர்னாண்டோ இன அழிப்பில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது!

லண்டனில் கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ 2008-9 இறுதி இனஅழிப்பு யுத்தத்தில் முக்கிய பங்காற்றியவர் என்பது அம்பலமாகியுள்ளது.

தமிழீழத்தில் நடை பெற்றயுத்தத்தின் இறுதி கட்டத்தில் அவர் மணலாறு பகுதியில் படையினரை நகர்த்தி இறுதி இன அழிப்பு யுத்தத்தில் பங்காற்றியது அம்பலமாகியுள்ளது.

போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் போர்க்குற்றங்கள் மீறப்பட்ட பகுதிகளில் அவர் பணியாற்றியமை கண்டறியப்பட்டுள்ளது.

யுத்த முடிவின் பின்னர் ஆகஸ்ட் 2009 முதல் 25 பிப் 2010 வரை அவர் பொது கட்டளை அதிகாரியாக இருந்துள்ளார்.பின்னராக 2010-2013வரை கெமுனு வாட்ச் முகாம் கட்டளை அதிகாரியாகவும் 23 அகடோபர் 2014- 21 ஜனவரி 2016: 651 பிரிகேடியர், கிளிநொச்சி மாவட்ட கட்டளை அதிகாரியாகவும் இருந்துள்ளார்.


அக்டோபர் 2016: இந்தியாவுடன் கூட்டு இராணுவ பயிற்சி பயிற்சிகளை இயக்கும் அதிகாரியாகவும் 2017ம் ஆண்டில் லண்டனுக்கு ஒரு பாதுகாப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இறுதிப் போர், காலமான 2008-9 இல் ஏப்ரல் 2008 இல் லெப்டினென்ட் கேர்ணலாக வெலிஓயாவில் பிரியங்க பெர்னாண்டோ பணியாற்றியுள்ளார்.

59 வது பிரிவின் ஒரு பகுதியாக இவரின் கீழான 11 வது கெமுனு வாட்ச் பட்டாலியன் என்ற படைபிரிவு ஜனகபுராவில் தெற்கு கிராமங்களை கைப்பற்றியது. இந்த காலத்தில் 59 பிரிவு அங்கிருந்தது.

ஐ.நா. அறிக்கைகளின் படி உறுதிப்படுத்திய தகவல்களின் படி முல்லைத்தீவுக்கு மிக நெருக்கமான சண்டையின் போது அரசாங்க படைகள் நடத்திய எறிகணை தாக்குதலில் வைத்தியசாலை தாக்கப்பட்டது.பலர் உயிரிழந்துமிருந்தனர்.

அதேபோன்று சரண் அடைந்தவர்களை பொறுப்பேற்று வெலிஒயாவிற்கு கொண்டு சென்றமை உள்ளிட்ட பல இனஅழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவர் தந்திரோபாய அடிப்படையில் லண்டனிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது

Allgemein