நாகபாம்பு கடித்த மாட்டை சமைத்து சாப்பிட்ட மக்கள்! 60 பேர் மருத்துவமனையில்!

தென் ஆப்ரிக்காவில் நாகபாம்பு கடித்து இறந்த மாட்டை சமைத்து சாப்பிட்டதில் 60 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்ரிக்காவின் மாகாணத்தில் உள்ள Mpoza கிராமத்தை சேர்ந்த மக்கள் விஷ தன்மை கொண்ட நாகபாம்பு கடித்து இறந்த மாட்டை சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அனைவருக்கும் தலைவலி, பேதி, வாந்தி போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உடனடியாக அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட 60 பேரில் 16 குழந்தைகள் அடங்குவர். 16 குழந்தைகளும் Nelsom Mandela Academic மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மற்றைய அனைவரும் Mathatha Regional மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்து மூன்று நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரையில் ஒருவருடைய உயிரிற்கும் ஆபத்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகச்செய்திகள்