தமிழன் நிலத்தில் வீட்டுக்கொரு வீகாரையா.?

எந்த மண்ணையும்
விரும்பியதில்லை
எம்மினம் ஈழ மண்ணைத்தவிர

கொன்று குவித்தாய்
அப்போதும் நின்று
தாக்குப்பிடித்தோம்
இனியும் தாக்குப்
பிடிப்போம் என்பதனாலா
எமை தாங்கி நிற்கும்
ஈழ மண்னை வாரிச்சுறுட்ட
எம் முற்றத்தில் நீ வந்துநிக்கிறாய்

அரச மரமில்லா இடத்தில்
அவசியமில்லா விகாரைகள்
இனவெறி அரசால்
இரையாகும் எம் ஈழ மண்

இப்படியே விட்டு விட்டால்
எம் வீட்டுக்கொரு வீகாரை
நாளை வினையாய் வந்தே தீரும்

உரிமைப்போராட்டத்தை
உலகுக்கு காட்டிய எம்மினம்
இன்று நடப்பதை எண்ணி
வாடுதே தினம் தினம்.

மன்னார் பெனில்‘

Allgemein