அமிர்தலிங்கத்தை கொன்றது மாவை? ஆனந்தசங்கரி குற்றச்சாட்டு!

தமிழர் விடுதலைக்கூட்டணி செயலாளர் அமிர்தலிங்கத்தை விடுதலைப்புலிகள் கொலைசெய்யவில்லை. யார் கொலை செய்தது என்று மாவை சேனாதிராசாவுக்குத்தெரியுமென போட்டுடைத்துள்ளார் வீ.ஆனந்தசங்கரி.

தம்பி பிரபாகரனை நான் நன்கு அறிவேன். அமிர்தலிங்கத்தை கொன்றது மாவை சேனாதிராசாதான். இது தொடர்பாக பேசுவதற்கு மாவை சேனாதிராசா எனக்கு எதிராக வழக்குப்போட்டாலும் பிரச்சினை இல்லையெனவும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பரப்புரைக்கூட்டமொன்றில் வைத்து தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக கொழும்பில் ஆயுததாரிகளது துப்பாக்கி சூட்டினில் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகிய இருவரும் கொல்லப்பட்டிருந்தனர்.இக்கொலைகள் தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டுக்களினை முன்வைத்திருந்த போதும் அவர்கள் அக்குற்றச்சாட்டை நிராகரித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாயகச்செய்திகள்