வவுனியாவில் மகிந்தவின் பாதுகாப்பு வாகனம் மோதி 3 தமிழர் படுகாயம்!

இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு வாகனம் ஒன்று மோட்டார் சைக்களில் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் வட தமிழீழம் வவுனியா – கனகராயன்குளம், புதுக்குளம் சந்தியில் இன்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து யாழில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக சென்ற மகிந்த ராஜபக்ச திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, அவரின் பாதுகாப்பிற்காக வந்த கார் ஒன்று புதுக்குளம் நோக்கி சென்ற மோடார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் அலேக்ஸ் முகுந்தன் (வயது 43) மற்றும் மதுலிதி (வயது 16) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த தந்தையும், மகளும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் மகள் மதிலிதி மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.‌