நீதிமன்றை அவமதிப்பவரை தேர்தல் ஆணைக்குழுவில் வைத்திருப்பதா..?

சட்டத்தை மதிக்காது நீதிமன்றை அவமதிக்கின்ற ஒரு நபரை தேர்தல் ஆணைக்குழுவில் உறுப்பினராக வைத்திருப்பது கேள்விக்குள்ளாவதாகச் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி மணிவண்ணண் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக எங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற மனநோயாளிகளுக்கு எல்லாம் பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். கந்தர்மடம் மணற்தறை வீதியிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..

தீவிர தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்ற காலத்தில் மனநோயாளிகளுக்கு பதிலளித்துக் கொண்டிருக்க பெரிதாக விரும்பவில்லை.

மனநோயாளிகளின் விதண்டாவதங்களுக்கு பதிலளிப்பது நேரத்தை வீணடிக்கின்ற தேவையற்ற செயலாகவே கருதுகிறோம்.

இத்தகைய மனநோயாளிகளிடம் இருந்து யாழ்ப்பாண பலகலைக் கழகத்தையும் தமிழ் சமூகத்தையும் காத்தது தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட நல்ல காரியங்களாகவே நான் நினைக்கின்றேன்.

ஆகவே இந்த மனநோயாளிகளுக்கு நான் பதிலளிக்க விரும்பாவிட்டாலும் நீதிமன்றிலே நடந்த விடயங்கள் குறித்து சில விடயங்களைக் குறிப்பிடுகிறேன்.

நீதிமன்றம் அதைச் செய்யவில்லை. இதைச் செய்யவில்லை என்று கூறுவதோ அல்லது யார் யாருக்கு எல்லாம் விருப்பமோ அவர்கள் எல்லாம் நீதிமன்றிலும் சென்று கதைத்துக் கொண்டிருக்க முடியாது.

ஏன் எனில் நீதிமன்றம் சந்தை அல்ல என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.