பேரிச்சம் பழத்தில் மறைத்து கடத்தப்பட்ட 1.16 கோடி ரூபா பெறுமதியான தங்கம் !!

சென்னை விமான நிலையத்தில் பேரிச்சம் பழத்தில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து வந்த ரபி சையத் என்ற பயணியிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அவரின் உடைமைகளில் இருந்த பேரிச்சம் பழங்களில் தங்கள் கட்டிடகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

தலா 100 கிராம் எடை கொண்ட 37 தங்க கட்டிகளும், 50 கிராம் எடை கொண்ட 2 தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

ரபி சையத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகச்செய்திகள்