புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் வெளியீடு!!

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர தமது அதிகாபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடமிருந்து குறித்த ஆயிரம் ரூபா நாணயத் தாளை நிதி அமைச்சர் இன்று பெற்றுக்கொண்டுள்ளார்.

நான்கு மதங்களின் வழிபாட்டுத் தளங்களும் இந்த ஆயிரம் ரூபா நாணயத்தாளில் பொறிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நான்கு இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் உருவங்களும் புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாளில் பொறிக்கப்பட்டுள்ளன.

Allgemein