ஜனாதிபதியாகும் பிரதமர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க???

ரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக ஆக்கி விட்டே நாம் ஓய்வோம் என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதான பேருந்து தரிப்பு நிலையத்திற்கு அருகில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றைய தினம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்க முயல்கிறார்கள்.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து இந்த அரசாங்கத்தை எதிர்வரும் 2020 வரையில் முன்னோக்கி எடுத்து செல்வார்கள்.

அத்துடன் நாம் எமது தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக ஆக்கி விட்டே ஓய்வோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Allgemein