விமான நிலையத்தில் இளைஞர் தற்கொலை ;

சென்னை விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பினை கிளப்பியுள்ளது. சென்னை உள்நாட்டு விமானநிலையத்தின் நான்காவது நுழைவு வாயில் அருகே இன்று (29-01-2018) காலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

25 வயது மதிக்கத்தக்க இளைஞர் 4 வது நுழைவுவாயில் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து கொண்ட இளைஞர் பெயர் சைத்தன்யா (30) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம்குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாளொன்றுக்கு அதிகளவிலான பயணிகளும், விஐபிக்களும் வந்து செல்லக்கூடிய விமான நிலையத்தில் நடைபெற்ற தற்கொலை சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

உலகச்செய்திகள்