இலங்கைத் தமிழரின் அதிரடி செயற்பாடு!

லண்டனில் இலங்கை தமிழர் ஒருவரின் அதிரடி செயற்பாடு தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

லண்டன் கிழக்கு ஹரோவிலுள்ள தபால் நிலையத்தில் கொள்ளையிட துப்பாக்கியுடன் நுழைந்த கறுப்பின நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தபாலத்தில் postmaster ஆக பணியாற்றும் இலங்கை தமிழர் ஒருவரினால் திருடன் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 24ம் திகதி சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதான Aron Parkinson என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரின் துணிச்சலான செயற்பாடு குறித்து பொலிஸார் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Allgemein