நொடிப் பொழுதில் தடுக்கப்பட்ட பாரிய விபத்து!!

வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை ஏற்படவிருந்த பாரிய வாகன விபத்து ஒன்று ரயில்வே ஊழியர்களின் சாதுரியத்தினால் தவிர்க்கப்பட்டுள்ளது.

வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பிரதான வீதியில் ரயில் பாதுகாப்புக் கடவையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ரயில் கடவை மூடுவதற்கு முன்னர் அடுத்த பக்கத்திற்கு செல்லும் நோக்கில் வாகனம் பயணித்துள்ளது. எனினும் அது பயணிப்பதற்கு முன்னர் வாகனம் நடுவில் நிற்கும் போது இரண்டு பக்க கடவைகளும் மூடப்பட்டுள்ளன.

இதன்போது, ரயில் கடவைக்கு அருகில் நின்ற முச்சக்கர வண்டியை, நிலையத்தில் இருந்தவர்கள் அவதானித்து கூச்சலிட்டுள்ளனர்.உடனடியாக செயற்பட்ட ரயில்வே ஊழியர்கள் நொடிப்பொழுதில் கடவையை திறந்து வாகனத்தை வெளியேற்றியமையினால் விபத்தை தடுத்துள்ளனர்.வாகனத்தை ஓட்டிய சாரதியை, வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Allgemein