உலகத்தமிழ்ப் பண்பாட்டுவிழாவால் விழாக் கோலம் பூணும் யாழ்நகர் !!!!!..

விழாக் கோலம் பூணும் யாழ்நகர் !!!!!…உலகத்தமிழ்ப் பண்பாட்டியக்க கலைப் பண்பாட்டுப் பெருவிழாவை … வடமாகாண முதலமைச்சர் மதிப்புக்குரிய சி.வி.விக்கினேஸ்வரன் ஐயா அவர்கள் ஆரம்பித்து வைக்கின்றார்.27.1.2018., காலை 8.00 மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் !!! கலைப் பெருவிழா விபரங்கள். அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி… காலை நிகழ்வுகளுக்கு தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் அரங்கில் முதலமைச்சர் சி..வி.விக்கினேஸ்வ்ரன் ஐயா அவர்கள் தலைமை தாங்கி நடாத்தி வைக்கின்றார். மாலை நிகழ்வுகள் , ஆவணஞானி இரா.கனகரட்ணம் அரங்கில் இந்தியத் துணைத்தூதர் தலைமையில் நடைபெறவுள்ளன. இந்நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் கலைஞர்கள் கலந்துகொள்கின்றனர். தமிழகத்திலிருந்து , மதிவாணன் ஐயா தலைமையில் 100 பேராளர்கள் வருகை தந்து கொழும்பிலிருந்து யாழ் நகருக்கு வந்துகொண்டுள்ளனர்.மற்றும் ஐரோப்பா, மலேசியா,அமெரிக்க போன்ற நாடுகளிலிருந்தும் பலர் வருகை தந்துள்ளனர். கலை கலாச்சார நிகழ்வுகளுடன்,கவியரங்கம், பட்டிமன்றம்,என்பன்வும் இடம்பெறவுள்ளன. கொழும்புத் தமிழ்ச்சங்கத்தலைவர்,தம்பு சிவசுப்ரமணியம்,சினிமாத்துறையிலும்,கவிஞர், வசந்தம் ரி.வி.நிகழ்ச்சித்தொகுப்பாளர்,பொத்துவில் அஸ்மின், ஒளிரும் வாழ்வு நிறுவனர்,அம்பிகை பாலன் , ஆகியோரும் மதிப்பளிக்கப்படவுள்ளனர். கலை அலங்கார ஊர்திப்பவனி , சத்திரம் சந்தியிலிருந்து,ஆஸ்பத்திரி வீதி வழியாகச் சென்று, ஆரியகுளம் சந்தியில் .. திரும்பி , வேம்படியூடாக, முனியப்பர் கோவிலடியை வந்தடையும்.பேராளர்கள் முனியப்பர் ஆலயத்திலிருந்து, மேளதாளத்துடன் ….வீரசிங்கம் மண்டபத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.ஊர்திப்பவனி, முல்லைத்தீவு , தீவகம்,வடமாராட்சியிலிருந்து கலந்து கொள்கின்றனர்.பண்ணை வீதியிலிருந்து,வீரசிங்கம் மண்டபம் வரை,மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளன. செய்திகள் யாழிலிருந்து கவிஞர் விசு செல்வராசா, அரவிந்தன் விக்கி ஆகியோர்.தொகுப்பு தமிழருவி.யேர்மனி.

நிகழ்வுகள்