.மனதை நெருடிய இரண்டு கால்களும் அற்றவருக்கு வாழ்வாதார உதவி

கடந்த சில நாட்களாக முகப்புத்தகத்தில் வீடியோ ஊடாக இரண்டு கால்களும் அற்ற நிலையில் வாழ்வாதாரத்திற்கு உதவி கோரிய கிளிநொச்சி எள்ளுக்காட்டைச் சேர்ந்த தங்கராஐா என்பவரிற்கு JAFFNA CENTRL COLLEGE OBA-96 நண்பர்கள் உடனடியாகவே யாழ்எய்ட் ஊடாக வாழ்வாதார உதவியாக தினமும் 5 லீற்றருக்கு மேல் பால் தரக்கூடிய பசு மாடு இரண்டு கிழமைக்கு முன்னர் கன்று ஈந்த நிலையில் உடனடியாகவே வருமானம் பெறத்தக்க வகையில் வழங்கியதுடன் சில மாதங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் மாட்டுக்கு கொட்டகை அமைப்பதற்கும் இதர தேவைகளுக்கும் என ஒருதொகை பணம். பிள்ளைகளின் கற்றலுக்கான கற்றல் உபகரணப் பொதிகள் மாட்டுக்கான உணவுகள் என்பனவற்றை வழங்கியதுடன் தாயகம் எங்கும் பசுமையின் விடியல் செயற்றிட்டத்தின் கீழ் பயன்தரு மரக்கன்றுகளையும் வழங்கி இனி வரும் காலங்களில் மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய தேவையினை இல்லாமல் செய்துள்ளனர்.

தாயகச்செய்திகள்