தமிழீழ தேசத்தை மைத்திரி அனுமதித்தாரா? நாமலுக்கு எழுந்த சந்தேகம்

தமிழீழ தேசத்தை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவர் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏற்றுக் கொள்கிறதா? என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வினா எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் ஞானம் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வினிடையே தமிழீழ விடுதலைப் புலிகளின் புரட்சிகரப் பாடல்கள் சிலவும் ஒலிக்கவிடப்பட்டன.

இந்த விவகாரம் தென்னிலங்கை அரசியல் களத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது ருவிட்டர் தளத்தில் இந்த விடயம் குறித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிகழ்வில் விடுதலைப் புலிகளின் பாடல்கள் இசைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தமிழீழத் தேசத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக அமைகிறதா? என்ற நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

Allgemein