பிள்ளைகள் தாய்க்கு செய்த துரோகம்!! கொடூரச் செயல்!

இலங்கையில் பெற்ற தாயை பாரமாக நினைத்து பொலிஸ் நிலையத்தில் விட்டுச் சென்ற பிள்ளைகள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.வெலிமடை, நுகத்தலாவ பிரதேசத்தில் வயோதிப தாயை பொலிஸ் நிலையத்தில் விட்டுச் செல்ல பிள்ளைகள் முயற்சித்துள்ளனர்.

83 வயதான குறித்த தாயை பார்த்துக் கொள்ள முடியாதென அவரது மகள், மகன் மற்றும் மருமகள் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்டுள்ளனர்.இந்த தாய் உடல் நிலை சரியில்லாத நிலையில் தனது மகளிடம் வாழ்ந்து வந்துள்ளார்.இந்நிலையில் அவரை பார்த்துக்கொள்ள முடியவில்லை என கூறி அவரது மகள் கம்பளைப் பிரதேசத்தில் உள்ள அவரது மருமகளின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். பின்னர் மருமகளாலும் பார்த்து கொள்ள முடியவில்லை எனக் கூறி தாயை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர், பிள்ளைகளை அழைத்து தாயை பொறுப்பேற்குமாறு பொலிஸ் அதிகாரிகள் கூறிய போதிலும் தம்மால் பார்த்துக் கொள்ள முடியாதென பிள்ளைகள் நிராகரித்துள்ளனர்.இந்த நிலையில் பொலிஸார் அவரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

தாயகச்செய்திகள்