களத்தில் நிற்றாலும் கலாச்சாரத்தை கைவிடோம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

ஆண்டுக்கொருமுறை வரும் பொங்கல்
அடுத்த ஆண்டினில் வரும் பொழுது
மீண்டும் எம்மை நாங்கள் ஆளுகின்ற
மேன்மையுறு நாளாய் தோன்றிடட்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தமிழரின் கலை கலாச்சார பண்பாடுகளை உலகிற்கு எடுத்துரைக்கும் முகமாகவும் உழவுத் தொழிலுக்கு உறுதியாக நிற்கும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் தமிழர்களின் மரபுத் திருநாள் – 2018

20.01.2017 சனிக்கிழமை அன்று மதியம் 01:00 மணியளவில் இலண்டனில் உள்ள குறைடன் எனும் நகரத்தில் இடம்பெற்றது.
இவ் விழாவில் நூற்றுக்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

மேலும் தாம் களத்தில் நின்றாலும் கலாச்சாரத்தை கைவிடோம் என்பது போன்று தமிழ் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் விதமான தமிழர் கலைகளை உள் அடக்கிய நிகழ்வுகளும் இத் தைதிருநாள் விழாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒழுங்கமைத்து செயற்படுத்தியதும் சிறப்பம்சமாகும்.

இலங்கை அரசுக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழம் நோக்கிய பல் வேறு பட்ட வேலைப்பாடுகளை முன்நகர்த்தி வரும் நிலையிலும் தமிழராகிய எமது பண்பாடுகளையும் கட்டிக் காக்க நினைப்பது பாராட்டத்தக்க ஒன்றாகும்…

தை பிறந்தால் வழி பிறக்கும்…
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்