அலறியடித்தோடிய பொதுமக்கள் – 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

இந்தோனிசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில, இன்று செவ்வாய்கிழமை(23.01.2018) 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், அங்குள்ள உயரமான கட்டிடங்களில் வசித்து வரும் மக்களும், அலுவலக அடுக்குமாடி கட்டிடங்களில் வேலைச் செய்துக் கொண்டிருந்த மக்களும், அலறியடித்துக் கொண்டு, அந்தக் கட்டடங்களிலிருந்து வெளியேறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த நிலநடுக்கம் 43 கிலோமீற்றர் ஆழத்தில், கடலோர மேற்கு ஜாவாவை மையமாகக் கொண்டு, ஜகார்த்தாவின் தென்மேற்கில், சுமார் 153 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சுனாமி ஆபத்து இல்லை எனவும், அமெரிக்காவின் புவியியல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகச்செய்திகள்